Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Friday, June 25, 2010

செம்மொழி மாநாடு !!




செம்மொழி மாநாடு !!

வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!

நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!


காவேரி நீரை ..
கானல் நீராக்கினாலும்..

ஏழை விவசாயி
..
எலிக்கறியுண்டு..
தன்னுயிர் ஈந்தாலும் ..
தமிழன் உயிர் தானே என..
தூங்கி விட்டாலும் ..

செம்மொழி
மாநாடு..
மாபெரும் வெற்றி !! ..



ஒக்கேனக்கல் கூட்டு
குடிநீர் திட்டத்தில்..
அண்டை மாநிலம் ..
துரோகம் இழைத்தாலும் . ..
தமிழனுக்கு மீண்டும் மீண்டும் ..
அநீதி இழைக்கப் பட்டாலும்..

செம்மொழி
மாநாடு ..

மாபெரும் வெற்றி !!


மூத்த தமிழ்குடி ...
ஈழத்தில்
கோரமாய்..
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி..
அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..

அழுகின்ற
தமிழ்
மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!!








விலைவாசி உயர்த்தி விட்டு..
இலவசதிட்டம் தந்து...

வளர்ச்சி திட்டம்
மறந்து..
மின்சாரத்தை துண்டித்து ..

இருட்டில் தமிழன் இருந்தாலும்..

தன் தவறை மறைக்க ..

செம்மொழி மாநாடு காணும்
தமிழ் இனத் தலைவரின் ..
செம்மொழி மாநாடு !!
மாபெரும் வெற்றி!! வெற்றி!!