Friday, June 25, 2010

குடிகாரன் !!

குளித்து விட்டு
கோவில் சென்றேன்..
குடித்து விட்டு
வந்தேன் என்று..
வாய் கூசாமல்
வசை பாடினான் ..
புடவை அணியா பூசாரி !!

பொய் குற்றம் கூறுகிறான் என்று
முறை இட்டேன்
முற்றும் துறந்த
முனிவரிடம்..

பூசாரியின் ஜால்ராவில்
பூரித்து போன முனிவரோ..
"உயர்வாய்
உன்னை நீயே
எண்ணாதே"..
குடி காரன் தான் நீ..
ஆம்,
தாழ்ந்த குடிகாரன் தான் நீ என்று..
என் தரம் தாழ்த்தி ஏசினார் ..

புரிந்து கொண்டேன்
பூசாரியே மேல் என்று..

குளித்தது குற்றமா ..
கோவிலுக்குள் சென்றது குற்றமா..
தாழ்ந்த குடியில் பிறந்தது குற்றமா என்று
குமுறுகிறேன் தலை
குனிந்த படி ..!!

கோவிலுக்குள் இடம் இல்லை எனினும்..
இறைவா..
உன் மனதில் இடம் இல்லை என்று
உருக்கி விடாதே..என்
உடைந்த
உணர்வுகளை..

உலகம் உன்னை
வெறும் கல் என
வெறுத்திடும் முன்னே !!
உணர்த்திடு ..
என் திறமை..
என்ன வென்று ?

3 comments:

  1. awesome sir..... nenja thotruchu sir... 2 times read paanni thaan purinjathu... intha maari kavithai eluthunga sir... throw away ur love kavithais... this is awesome sir... really a good one... feels good

    ReplyDelete
  2. sir...really nice.....................never thought you would write so well..........

    ReplyDelete
  3. vuruki vidathe en vudaintha vunarvugalai...
    sama line sir....

    vazthukal:-)

    ReplyDelete