
காதல் மணம் புரிந்த
கணவனை...
கார்கில் போரிலும்..கடல் வழி.. ஊடுருவிய..
கயவர்களின் ..
கண்மூடித் தனமான ..மும்பைத் தாக்குதலில்..
மூத்த மகனையும் ..
தேசத்திற்காய் இழந்திருப்பினும்...
நேசமிக்க உறவினர்கள்
"அன்னியரின் ..
ஆயுதத் தாக்குதலில் ..
இவனும் இன்னுயிர்..
ஈந்துவிட்டால் ..
உடல் மட்டும் தான் ..ஊர் வந்து சேரும் " என ..
எச்சரிக்கை விளித்தாலும்..கலங்கி போய் விடாது ..கணினி தொழில்நுட்பக் கல்வி ..
குளிரூட்டப்பட்ட அறை..
மென்பொருள் நிபுணர் ..
கணினியும்.. கைபேசியும் என..
களிப்புடன் காலம் கழித்த எனை..தமையனின். .
இறுதிச் சடங்கில் ..
பட்டாளத்தில்.
பணியில் சேர்ந்து ..
தேசக் கடமை ஆற்ற..
பணித்த என்
வீரத் தாயின்..
விருப்பதிற்கிணங்க ..
எல்லை பாதுகாப்புப் படையில் ..
எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்க ..
கடும் குளிரிலும்..
கொடும் வெயிலிலும்..
காவல் பணி புரிந்தாலும்..
கடுகளவும் ..
கவலை கொண்டதுமில்லை..
கண்ணீர் சிந்தியதுமில்லை..
பட்டாளத்தில் பணி அமர்ந்ததற்கு ..
என்..
இரு கண்கள் தேடுவதெல்லாம்...இருபது வருடங்களுக்கு முன்னர் ..
இதே இடத்தில ..
காவல் பணி புரிந்த ..என்
பாசமிகு தந்தையின் ..
பாதச் சுவடுகளைத் தான் ..